திருச்சி - பெங்களூரு சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

 
ரயில் ரயில்

பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் திருச்சி மற்றும் பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் அதிவேக சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய செய்திக்குறிப்பில், இரு நகரங்களுக்கும் இடையேயான ரயில் சேவைகள் மேலும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு ரயில்

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06007) ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்தடையும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06008) அதே ஜூன் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் ரயில்

இந்த இரு மார்க்கங்களிலும் தலா 4 கூடுதல் சேவைகள் என மொத்தம் 8 சேவைகள் பயணிகளுக்காக வழங்கப்பட உள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயில் சேவைகளுக்கான பயணச் சீட்டு முன்பதிவு மிக விரைவில் தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்தச் சேவை நீட்டிப்பு, வார நாட்களில் இரு மாநிலங்களுக்கும் இடையே பயணிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.