பயணிகள் கவனத்திற்கு... சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் சேவை ரத்து!

 
மின்சார ரயில் மின்சார ரயில்

சென்னை - அரக்கோணம் இடையே இன்று முதல் ஜூன் 12ம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக இயங்காது என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரக்கோணம் ரயில் நிலைய யார்டில் மிக முக்கியமான பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் 5 நாட்களுக்குப் புறநகர் ரயில் சேவைகளில் இந்த முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்

இதன்படி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 4 மற்றும் காலை 5 மணி ரயில்களும், திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கு இரவு 9.15 மற்றும் இரவு 11.10 மணி ரயில்களும் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், சென்னை கடற்கரை மற்றும் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் அனைத்தும் திருவாலங்காடுடன் நிறுத்தப்படும். இந்த ரயில்கள் காலை 4.05, 6.20, 6.30, 9.10, 10.30, 11 மணி, மதியம் 12.40, 1.25, 2.25, மாலை 3.45, 4.45, 5.15, 5.45, 6.05, 6.15, 6.40 மற்றும் இரவு 7.30, 8.20, 9.10, 10, 10.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படுபவை ஆகும்.

பறக்கும் ரயில்

மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை மூர் மார்க்கெட் மற்றும் கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படாமல், திருவாலங்காட்டிலிருந்து வழக்கமான நேரத்தில் சென்னை நோக்கிப் புறப்படும். அதன்படி காலை 3.45, 4.25, 5.25, 6.20, 6.40, 6.50, 7.35, 8.15, 8.55, 11.15 மணி, மதியம் மற்றும் மாலை 2.25, 3.40, 4.15, 4.50, 6 மணி, இரவு 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் திருவாலங்காட்டிலிருந்து இயக்கப்படும். இதனால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.