யானைகளைக் காப்பாற்ற ஓடும் ரயிலை நிறுத்தி சாகசம்... நெகிழ்ச்சி வீடியோ!

 
ரயில்

வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் ஒன்று மீண்டும் வழிமாறி தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த ரயில் வருவதைக் கண்டு திகைத்துப்போன யானைகள் பீதியடைந்தன. இதனால் யானைகளுக்கும் ரயிலுக்கும் இடையே மிகப்பெரிய விபத்து நேரிடும் அபாயமான சூழல் உருவானது.

இதைக் கவனித்த குமாரராசா உடனடியாக தண்டவாளத்தின் அருகில் சென்று ஓட்டுநருக்கு சைகை செய்து ரயிலை நிறுத்தும்படி எச்சரித்தார். அவரது துணிச்சலான செயலால் அதிவேகமாக வந்த ரயில் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென ரயில் நின்றதால் சுதாரித்துக் கொண்ட யானைகள் பாதுகாப்பாகப் பின்வாங்கி அமைதியடைந்தன.

யானைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் வரை ரயிலை நகர வேண்டாம் என்று அவர் ஓட்டுநருக்கு சைகை மூலம் அறிவுறுத்தினார். சில நிமிடங்களில் யானைக் கூட்டம் முழுமையாகக் கடந்து சென்று வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக நுழைந்தது. பாதை முழுமையாகத் தெளிவான பிறகு ரயிலைத் தொடர்ந்து இயக்கலாம் என்று அவர் சைகை காட்டியதையடுத்து ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.