கோவை - தன்பாத் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்!

 
rail

 

கோவை மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 22, 2026) முதல் தொடங்குகிறது. இந்த ரயில் சேவை தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.

 இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு ரயில்

  • தன்பாத் - கோவை (வண்டி எண்: 22363): இந்த ரயில் தன்பாத்தில் இருந்து சனிக்கிழமைகளில் மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை பிற்பகல் 3.12 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு கோவை சென்றடையும்.

  • கோவை - தன்பாத் (வண்டி எண்: 22364): இந்த ரயில் கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு தன்பாத் சென்றடையும். இந்த சேவை வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி மற்றும் ரேணிகுண்டா உள்ளிட்ட 39 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மொத்தம் 22 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 8 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 11 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய 2 லக்கேஜ் பெட்டிகள் மற்றும் ஒரு பேன்ட்ரி கார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயில்

கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தொழில் மற்றும் கல்வி நிமித்தமாக வடமாநிலங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.