பயணிகளின் கனிவான கவனத்திற்கு... தென் மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

 
ரயில்

 

மதுரை கோட்ட ரயில் போக்குவரத்து மாற்றம்

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பராமரிப்புப் பணிகளின் காரணமாக நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையேயான பாசஞ்சர் ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மற்றும் திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் வருகிற 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும் மற்றும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் தண்டவாளம்

மேலும் செங்கோட்டையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயில் வழக்கமான வழித்தடத்தை மாற்றி சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி அறிவிக்கப்பட்ட இந்த ரயில் போக்குவரத்து மாற்றங்களின் காரணமாக சில குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

இதனால் பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தண்டவாள பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றங்களால் ஏற்படும் சிரமங்களுக்கு பயணிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்