ஜனவரியில் தென் மாவட்ட ரயில்கள் ரத்து... இப்பவே ப்ளான் பண்ணுங்க...!!

 
ரயில் முன்பதிவு

ரயில் விபத்துக்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை  மேற்கொள்ள  ரயில்வே திட்டமிட்டு பகுதி வாரியாக அதனைசெயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்   வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சிக்னல்  மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வ 2024  ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும்  ரத்து செய்யப்படுகிறது.

ரயில்

 இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  வடக்கு ரயில்வேயில் நடைபெற  உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரத்து செய்யப்படும் ரயில்கள் பட்டியல்  
கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2  தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.


மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651) ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 மற்றும் பிப்ரவரி 4   நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
 மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687) ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஜனவரி 8,15, 22, 29  தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. 
அதுபோல், டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642) ஜனவரி 13, 15, 20, 22, 27, 29 மற்றும் பிப்ரவரி 3, 5  தேதிகளில்  ரத்து செய்யப்படுகிறது.

ரயில்


டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652) ஜனவரி 16, 18, 23, 25, 30 மற்றும் பிப்ரவரி 1, 6  தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய  சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688) ஜனவரி 15, 19, 22, 26, 29 மற்றும் பிப்ரவரி 2, 5  தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய  ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி  எக்ஸ்பிரஸ் (16788) ஜனவரி 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 தேதிகளில்   ரத்து செய்யப்படுவதாக   ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web