பயண நேரத்தை திட்டமிட்டுக்கோங்க!! ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும்!!

 
ரயில்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் எனத் தெரிவித்துள்ளது  பாண்டியன், நெல்லை, பொதிகை உட்பட அனைத்து   விரைவு ரயில்களும்  சுமார் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ரயில்

 இதன்படி பாண்டியன், நெல்லை, பொதிகை உட்பட அனைத்து   விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.  திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து எனவும் அறிவித்துள்ளது. அத்துடன்   திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி உட்பட மற்ற   இடங்களுக்கு முன்பதிவு இல்லாத ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.  

ரயில்

திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.   சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக  புறப்படும் எனவும் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாறும்  ரயில்களின் நேரத்திற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web