நட்பு.. காதல்.. கொலை.. திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த திருநங்கை !!

 
அஞ்சலி

தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலூரி அஞ்சலி (21). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் வேலை செய்து வரும் பரமேஸ்வரியும் அஞ்சலியும் நெருங்கிய தோழிகள் ஆவர். இதனிடையே, பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி (22) என்ற திருநங்கை சகோதரி இருக்கிறார். 

பரமேஸ்வரியை பார்க்க அஞ்சலி அடிக்கடி அவரது அறைக்கு செல்லும் போது, திருநங்கை சகோதரியான மகேஸ்வரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், மகேஸ்வரியும், அஞ்சலியும் நெருங்கி பழக தொடங்கினர். மகேஸ்வரியுடன் இருப்பதற்காக அஞ்சலி, தான் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு, பரமேஸ்வரி, மகேஸ்வரி தங்கியுள்ள வீட்டுக்கு குடியேறினார் . 

அஞ்சலி

ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக மகேஸ்வரியை விட்டு அஞ்சலி சற்று ஒதுங்கியே இருந்துள்ளார். இது, மகேஸ்வரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அஞ்சலிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் அவரை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு பரமேஸ்வரி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுள்ளார். மகேஸ்வரியும், அஞ்சலியும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, அஞ்சலி, மகேஸ்வரி பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என மகேஸ்வரி எனக் கூறியிருக்கிறார். 

இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் இருவருக்கும் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. வீட்டில் இருந்து அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

அஞ்சலி

இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஞ்சலி உயிரிழந்தார். திருநங்கை மகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

From around the web