ட்ரம்ப் அடுத்த அதிரடி... திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தடை!

 
ட்ரம்ப்


 
அமெரிக்க அதிபராக 2 வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் தற்போது திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில்   கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பிறப்பால் ஆணாக இருந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக கலந்து கொள்வதை  தடை செய்யும் நிர்வாக உத்தரவில் இன்று கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது.

பெண்கள்


ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.  
அமெரிக்காவில்  டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்ற உத்தரவும் குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்

 
இந்நிலையில்தான், தேர்தல் பிரச்சாரத்தின்போதே டிரம்ப், ஆண்களை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற பிரச்சாரமும் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்படலாம் எனக்  கூறப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web