சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள்.. பகீர் சிசிடிவி காட்சிகள்...!!

 
கொடைக்கானல் திருநங்கைகள்

சுற்றுலா பயணிகளை மிரட்டி திருநங்கைகள் பணம் பறிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு  வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக காவல் துறை நடவடிக்கைகளால் கொடைக்கானலில் திருநங்கைகள் எல்லை மீறும் சம்பவங்கள் சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குழுவாக வந்து ஏரிச்சாலை,  கலையரங்கம் பகுதி, பிரையன்ட் பூங்கா பகுதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளை வழிமறித்து பணம் கேட்டு வருகின்றனர்.

திருநங்கைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏரிச்சாலை பகுதியில் உள்ள கடைகளில் பணம் கேட்கும் பொழுது அவர்கள் பணம் இல்லை என்று கூறினால் ஆத்திரமடையும் திருநங்கைகள் கடையில் இருக்கும் பொருட்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

இந்த சம்பவத்தால் ஏரிச்சாலை, நகர் பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுபோன்று பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web