குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி - போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

 
ஓட்டுநர் பயிற்சி போக்குவரத்து கார்

பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அரசு தரப்பில் குறைந்த கட்டணத்தில் தரமான ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும் எனப் போக்குவரத்துத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை தரமணியில் அமைந்துள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் இந்தத் தரமான பயிற்சி வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு இருசக்கர வாகனம், இலகுரக மோட்டார் வாகனம், பயணிகள் சேவை வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிகள் மிகக் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 3,000 பேர் வரை குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நகர்ப்புறங்களில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

டிரைவிங் லைசென்ஸ்

இந்நிலையில், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் எளிதில் ஓட்டுநர் உரிமம் பெறும் வகையிலும், பாதுகாப்பான வாகன ஓட்டுதலை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் அரசு நிறுவனமான தரமணி சாலைப் போக்குவரத்து நிறுவனம் குறைந்த கட்டணத்தில் இந்தப் பயிற்சியை அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.