இன்று மாலை வரை நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி... கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குவியும் மக்கள்!

 
நல்லகண்ணு

மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமான நிலையில் இன்று மாலை 3.30 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான 'பாலன் இல்லத்தில்' வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தோழர்கள், பொதுமக்கள் என்று நேற்று முதல் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லகண்ணு உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாலன் இல்லத்தில் பொதுமக்கள் வரிசையில் குவிந்து வருகின்றனர்.

முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலேயே கழித்த அந்தப் பொதுவுடைமைப் போராளி, மறைவிலும் ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். நூற்றாண்டு கண்ட நாயகர் ஐயா நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார். 

வாழ்ந்த காலத்தில் கனிமவளக் கொள்ளை, தீண்டாமை மற்றும் ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர், தனது மறைவுக்குப் பிறகும் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாக வழங்க வேண்டும் என்று அவர் ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், அவரின் விருப்பப்படியே, அவரது மகள்கள் மற்றும் பேரன்களிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது.

நல்லகண்ணு

ஐயா நல்லகண்ணு மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3:30 மணி வரை சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான 'பாலன் இல்லத்தில்' அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நல்லகண்ணு

திருநெல்வேலியில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்டம் முதல் மணல் கொள்ளை எதிர்ப்பு வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தின் மனசாட்சியாக வாழ்ந்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. முதுபெரும் இடதுசாரித் தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்திலேயே கழித்த அந்தப் பொதுவுடைமைப் போராளி, மறைவிலும் ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.