ஏக களேபரத்தில் திருச்சி... விடுப்பில் சென்றார் உதவி ஆணையர்!

 
உதவி ஆணையர் திருச்சி

காவல்துறையில் எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும் நுண்ணறிவிப்பிரிவுதான் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருச்சியில் ஞாயிற்றுகிழமையில் கூட சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் நேற்று களையிழந்து காணப்ப்பட்டது. காரணம் திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் விடுப்பில் சென்றுள்ளார். ஆனால், அவர் பணியிட மாற் றத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் வந்தது முதலே தமிழகம் முழுவதும் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துவிட்டத்தாக காவல்துறை வட்டாரத்தில் புலம்பல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. மாநகர்களை பொறுத்தவரை காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பதவி தான் அனைத்துக்கும் அச்சாணியாக கருதப்படுகிறது. தகவல்களை சேகரித்து உயர்அதிகாரிகளுக்கு முறையாக அனுப்புவதும், எந்த ஒளிவுமறைவும் இன்றி பிரச்னைகளை முன்கூட்டியே ஆராய்ந்து தெரிவிப்பதும் இவர்களாலேயே சாத்தியம் இந்திலையில் நேற்று திடீரென உதவி ஆணையர் விடுப்பில் சென்றிருப்பது ஆயிரம் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறது. 

சத்யப்பிரியா

தென்னுார் பகுதியில் உள்ள கட்டுமானம் ஒன்றை 8 பேர் கும்பல் ஐஎஸ் ஏசி விடுப்பில் சென்ற நேரத்தில் ஜேசிபி மூலம் இடித்து தரை மட்டமாக்கியது. இதனால், சிறுபான்மையினருக்கு பிரச்னை ஏற்படும் இந்த விவகாரத்தில் ஏன் மெத்தனமாக நடந்து கொண்டார் ஏசி என்கிறார்கள் விபரம் அறிந்த வட்டாரத்தினர். ஏடிஜிபி அலுவ வகத்தில் இருந்து மாநகர போலீஸ் கமிஷனருக்கு முக்கிய தகவல்கள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்த அறிவிப்புகள் நேரடியாக தெரிவிக்கப்படும். ஆனால் ஏடிஜி பியாக அருண் பதவி ஏற்றது முதல் சில தகவல்கள் மற்றும் வேலைகள் நேரடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிற்கே தெரிவிக்காமல்அதிரடியாக செந்தில்குமார் மேற்கொண்டதாகவும்  டிசி செல்வகுமாரே நேரடியாக களத்தில் இறங்கி ஸ்பா சென்டர்களில் ஆய்வு நடத்தியதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள். இதானால் கடுப்பான ஆணையர் சத்யபிரியா ஆயுதப்படைக்கு உதவி ஆணையரை போகச் சொல்லியதாக கூறப்படுகிறது.இதை சற்றும் எதிர்பார்க்காத அலுவலக வட்டாரம் ஸ்தம்பித்து போய் உள்ளது. 

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது "மாநகர போலீஸ் கமிஷனராக சத்யப்பிரியாவிடம் சொல்லாமல்,செந்தில்குமார் தானகவே முடிவுகளை எடுக்கிறார் அவர் அருணுக்கு வேண்டியவர். இதனால் சத்தியபிரியா உதவி ஆணையர் செந்தில்குமாரை கண்டித்துள்ளார் என்றும் என்னுடைய செல்வாக்கு என்ன என்பதை மூன்று வாரங்களில் காட்டுகிறேன் என்று சவால் விட்டதாகவும், அதனால் மாநகர ஆணையர் வெகுவிரைவில் மாற்றப்படுவார் என்கிறார்கள்.

திருச்சி மாநகரில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியர், ஐ.ஜி, காவல்துறை ஆணையர், காவல்துறை துணை ஆணையர் 14ல் எட்டு காவல் நிலைய ஆய்வாளர்கள் எனக் கோலோச்சிக் கொண்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அருண் வந்தது முதல் உதவி ஆணையரின் ஆட்டம் அதிகமாகி விட்டதாக புலம்பலகள் ஒலிக்க, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மலைக்கோட்டை

உதவி ஆணையரை பணியிட மாற்றம் செய்ய ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்கிறார்கள் சக அதிகாரிகள். காடு கெட வெள்ளாடும்... நாடு கெட .... என ஒரு சொலவடை உண்டு கிராமங்களில். என்னத்த சொல்ல?

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web