பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரத்தில் வீச்சு

 
குழந்தை

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, பிறந்து சுமார் 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரத்தில் கைப்பையில் வீசப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசிறியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

சாலையோரத்தில் கிடந்த கைப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் பையைத் திறந்து பார்த்தபோது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தை பிரசவம்

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.குழந்தையைச் சாலையோரத்தில் விட்டுச் சென்றவர்கள் யார், எதற்காக விட்டுச் சென்றனர் என்பது குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை விட்டுச் சென்றவர்களைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.