ரேஷன் அரிசியை கேரளாவுக்கு விற்று ரூ.22 கோடி மோசடி? ரூ.3 கோடியில் சொகுசு வீடு கட்டிய தம்பதி!

 
கேரளா

 

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய நெல்லை அரிசியாக மாற்றி ஒப்படைக்காமல், கேரள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரிசி ஆலை உரிமையாளர் குடும்பத்தினர், அந்தப் பணத்தில் சொகுசு வீடு மற்றும் புதிய அரிசி ஆலை கட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவுக்கு ரேஷன் அரிசி விற்று மோசடி புதிய ஆலை, சொகுசு வீடு கட்டிய தம்பதி

மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வந்த சண்முகம் (59), அவரது மனைவி வனிதா (47), மகன் ரெங்கராஜன் (28) ஆகியோர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரவை முகவர்களாகச் செயல்பட்டு வந்தனர்.

அரசு வழங்கிய 3,700 டன் நெல்லை அரைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பாமல், கேரள வியாபாரிகளுக்கு சுமார் ரூ.12 கோடிக்கு விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.22.20 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக 3 பேர் கைது..!

இந்த வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மணப்பாறையில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு கட்டி வருவதுடன், பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய அரிசி ஆலையையும் அமைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், நிலங்கள் வாங்கிய விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்