சொந்த ஊரில் கட்டிய வீட்டைப் பார்க்க மறுத்ததால் தகராறு… அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!
திருச்சி சோமரசம்பேட்டை அருகே கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த ஊரில் புதிதாகக் கட்டிய வீட்டைப் பார்ப்பதற்காக மனைவி ராதிகாவை கணவர் செல்வம் அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கு வர ராதிகா மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ராதிகா, வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வம், அதே அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
