முதல்வர் விஜய்யுடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாயோனி சந்திப்பு!

 
விஜய் திரிணாமுல் காங்கிரஸ் சாயோனி கோஷ்

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான சாயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த சாயோனி கோஷ், அவருக்குப் பொன்னாடை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சருடன் அவர் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கிய நடிகையும் பாடகியுமான சாயோனி கோஷ், கடந்த ஜூன் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தற்போது என்.சி.பி.ஐ. கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.