திரிணாமுல் காங்கிரஸ் பிளவு: மம்தா பானர்ஜி அணிக்கு 'கால்பந்து' சின்னமும், ரிதப்ரதா அணிக்கு 'அஞ்சல் உறை' சின்னமும் ஒதுக்கீடு!

 
மம்தா பானர்ஜி ரிதப்ரதா

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் புதிய பெயர்களையும் தேர்தல் சின்னங்களையும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.

கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான இரட்டை மலர்கள் சின்னமும், ஒட்டுமொத்தக் கட்சியின் பெயரும் தேர்தல் ஆணையத்தால் இடைக்காலமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவியை தக்கவைத்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு 'மம்தா அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்' எனப் புதிய பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேர்தல் ஆணையம் தரப்பில் 'கால்பந்து' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், அரூப் ராய் மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான மற்றொரு அணிக்கு 'ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணிக்கு 'அஞ்சல் உறை' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

கனிமொழி மம்தா

மேற்கு வங்கத்தில் விரைவில் நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரேஜினகர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், இந்தப் புதிய பெயர்கள் மற்றும் புதிய சின்னங்களின் அடிப்படையிலேயே இரு அணிகளும் தனித்தனியாகப் போட்டியிட உள்ளன.