திரிபுரா மாநில டிஜிபி அனுராக் தங்கர் அலுவலகத்திலேயே மர்ம மரணம் - அதிர்ச்சியில் அம்மாநில அரசு!

 
திரிபுரா டிஜிபி அனுராக் தங்கர்

திரிபுரா மாநிலத்தின் காவல் துறை தலைமை இயக்குநரான அனுராக் தங்கர், தனது அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலக் காவல்துறையின் உச்சபட்ச உயர் அதிகாரி ஒருவரே தனது பணி இடத்தில் உயிரிழந்திருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் டிஜிபி அனுராக் தங்கர், வழக்கம்போலத் தனது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது சொந்த அலுவலக அறைக்குள்ளேயே அவர் தற்கொலை செய்து கொண்டு முடித்துக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல்துறை தலைவரே தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அம்மாநில அரசு நிர்வாகமும் காவல் துறையும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்துத் திரிபுரா மாநில அரசு உடனடியாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபியின் இந்த தீவிர முடிவுக்கு என்ன காரணம்? அவருக்கு ஏதேனும் பணி நெருக்கடி இருந்ததா அல்லது இதன் பின்னணியில் வேறு யாரேனும் காரணம் இருக்கிறார்களா? என்பது குறித்துப் பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை உடனடியாகச் சேகரித்து முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தர பிறப்பித்துள்ளது.