ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் த்ரிஷா! அரசியல் மாற்றம் குறித்துப் பேச மறுப்பு! மக்களுக்கு விடுத்த ஒரே ஒரு வேண்டுகோள்!

 
த்ரிஷா வாக்குப்பதிவு த்ரிஷா வாக்குப்பதிவு

சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை நடிகை த்ரிஷா தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் வருகை தந்தார்.

வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்த த்ரிஷா, பின்னர் மை வைத்த விரலைக் காண்பித்து புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தார். இவரைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அங்கிருந்த வாக்காளர்கள் உற்சாகமடைந்தனர்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த த்ரிஷாவிடம் செய்தியாளர்கள், "தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "இன்று நான் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. மக்கள் அனைவரும் கண்டிப்பாக வந்து உங்களது வாக்கைச் செலுத்துங்கள். அதை மட்டும்தான் இன்று நான் முக்கியமாகச் சொல்ல விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, அரசியல் ரீதியான கருத்துகளைத் தவிர்த்து அங்கிருந்து தனது தாயுடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.

த்ரிஷா

ஏற்கனவே நடிகர் அஜித், சிவகார்த்திகேயன், நகுல் உள்ளிட்டோர் வாக்களித்துள்ள நிலையில், த்ரிஷாவின் வருகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி த்ரிஷா விடுத்துள்ள இந்தச் சுருக்கமான செய்தி, அவரது ரசிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.