திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டி... வைரலாகும் போஸ்டரால் அரசியல் பரபரப்பு!

 
த்ரிஷா

நடிகை திரிஷா கோவையில் நடத்திய தனியார் நிகழ்ச்சி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவரது அரசியல் வருகை குறித்து மீண்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

திருச்சி கிழக்கில் போட்டியென போஸ்டர் வைரல்:நடிகை திரிஷா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வரவிருக்கும் தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் போஸ்டர்கள் பரவி வருகின்றன.

த்ரிஷா

அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தல் போட்டி குறித்த இத்தகைய செய்திகளுக்குத் தவெக தரப்பிலோ அல்லது நடிகை திரிஷா தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வ மறுப்போ விளக்கமோ அளிக்கப்படவில்லை.

முன்னதாகக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போதும், அதற்கு முன்பும் செய்தியாளர்கள் "அரசியலுக்கு வருவீர்களா?" எனக் கேள்வி எழுப்பியபோது, திரிஷா அதற்கு நேரடியாக மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் புன்னகையை மட்டுமே பதிலளித்துச் சென்றார்.

த்ரிஷாவிஜய் த்ரிஷா

தற்போது தவெக பெயரில் போஸ்டர்கள் வைரலாகி வருவது, அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.