இடைத்தேர்தலில் திரிஷா.. திமுக எம்பி அப்துல்லா பகீர்!!

 
த்ரிஷா

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் திரித்துப் பரப்பப்பட்டு நாடகமாடப்படுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் (எம்பி) எம்.எம். அப்துல்லா கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி பேசிய பேச்சு குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி, அரசியல் ஆதாயத்திற்காகக் கைது நாடகம் நடத்தப்பட்டு வருவதாக எம்பி அப்துல்லா சாடியுள்ளார்.

அப்துல்லா

இது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், "குறிப்பிட்ட நடிகை விரைவில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிடுவார். அதன் பின்னர் வரவிருக்கும் இடைத்தேர்தலில் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டு, தவெகவின் முக்கியத் தலைவியாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமிட்ட அரசியல் நகர்வுகளுக்காகவே உதயநிதி ஸ்டாலின் மீது தவெகவினர் வீண் பழி சுமத்துவதாகவும் அப்துல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷாவை மையப்படுத்தி திமுக எம்பி அப்துல்லா வெளியிட்ட இந்த அறிக்கை மற்றும் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.