சட்டமன்றமா… மாநிலங்களவையா? த்ரிஷாவுக்கு முன்வைக்கப்படும் அரசியல் வாய்ப்புகள்!
தமிழக அரசியலில் நடிகை த்ரிஷாவின் பெயர் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் அவரைக் களமிறக்க வேண்டும் எனக் கட்சியின் சில தரப்பினர் தலைமைக்கு ஆலோசனை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி கிழக்குத் தொகுதியில் த்ரிஷாவுக்கு ஆதரவாக சிலர் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், தொகுதியில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவு திரட்டும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இத்தகைய நடவடிக்கைகள் குறித்து தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

இதற்கிடையே, த்ரிஷாவை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வைப்பதற்குப் பதிலாக, 2028-ல் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களில் ஒன்றின் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்றும் கட்சித் தலைமைக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியிடுவாரா அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பு பரிசீலிக்கப்படுகிறதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே, தற்போது வெளியாகியுள்ள தகவல்களை அரசியல் வட்டாரத்தில் நிலவும் ஊகங்களாகவே பார்க்க வேண்டும்.
