நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ?

 
trisha

திரையுலகில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் இணைந்து நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னணி நடிகை திரிஷா. இவர்கள் இருவரின் நட்பு குறித்துச் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பல்வேறு விதமான விவாதங்கள் எழுவது வழக்கம். இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை திரிஷா அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென அன்ஃபாலோ செய்துவிட்டதாகப் புதிய செய்தி பரவி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

trisha

ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்குத் தவறாமல் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களைப் பகிரும் திரிஷா, இந்த ஆண்டு எவ்வித வாழ்த்துப் பதிவும் வெளியிடாமல் மௌனம் காத்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து அவர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார் எனச் சில இணையதளவாசிகள் ஆதாரமற்றScreenShot-களைப் பகிர்ந்து வதந்திகளைக் கிளப்பி விட்டனர்.

trisha

இதனால் இவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகள் இணையத்தில் பரவலாக எழத் தொடங்கின.ஆனால் இந்த விவகாரத்தின் உண்மை நிலவரத்தை ஆராய்ந்தபோது, நடிகை திரிஷா ஆரம்பத்திலிருந்தே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யைப் பின் தொடரவே இல்லை என்ற அசல் விபரம் வெளிவந்துள்ளது. பின் தொடராத ஒரு கணக்கை அவர் எவ்வாறு அன்ஃபாலோ செய்ய முடியும் என்று விபரமறிந்த பலரும் இணையத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர்.