உறவினர்களுடன் பாட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை த்ரிஷா... வைரலாகும் புகைப்படம்!

 
த்ரிஷா

நடிகை த்ரிஷா தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும் அவதூறான அரசியல் ரீதியான பேச்சுக்களும் தீவிரமாகப் பரவி வரும் சூழலில் அவர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். வதந்திகளுக்கெல்லாம் எந்தவிதமான பதிலும் அளிக்காமல் அவர் தனது பாட்டியின் பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.  

வீட்டிலேயே நடந்த இந்தச் சிறிய விழாவின் போது தோழிகளுடன் சேர்ந்து சுவையான உணவுகளைக் சாப்பிட்டதுடன் நீண்ட நேரம் ஜாலியாக அரட்டையும் அடித்துள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சில அழகான புகைப்படங்களைத் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் பதிவேற்றம் செய்துள்ளார்.

One more picture of #Trisha with her mom & her #Grandmother during her birthday celebration.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன.சமூக வலைதளங்களில் எழும் தேவையற்ற வதந்திகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அவர் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதை இது காட்டுகிறது. திரையுலகில் தனது கடின உழைப்பாலும் தனித்துவமான அழகாலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி நாயகியாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.