இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை!! அதிரடி உத்தரவு!!

 
ட்ரோன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மண்டலத்துக்கான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் இன்று கலந்துரையாடுகிறார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி செல்கிறார். இன்று மாலை நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

ஸ்டாலின்


அதன் பிறகு   இரவு திருச்சியில் தங்கும் முதல்வர் ஸ்டாலின்,  நாளை உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023  கண்காட்சி மற்றும் கருத்தரங்கு  திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

ட்ரோன் மூலம் பார்சல்
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி இருந்து  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில் பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும்  திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பிறப்பித்துள்ளார்.  ஜூலை 26, 27  இரண்டு தினங்களில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web