பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து; ஓட்டுநர் உயிரிழப்பு.. 10 மாணவர்கள் காயம்!
Sep 4, 2026, 11:35 IST
சிவகங்கை மாவட்டம் மேலூர் பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
