பைக் மீது லாரி மோதி கோர விபத்து... தம்பதி பலி; 2 மகள்கள் படுகாயம்!

 
விபத்து மரணம் கொலை  தற்கொலை

புதுக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கொடூர சாலை விபத்தில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் இரண்டு மகள்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனது மனைவி திலக சந்திரா மற்றும் மகள்கள் தர்ஷிகா, நிரஞ்சனா ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பின்னால் வந்த லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி திலக சந்திரா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அவர்களின் இரு மகள்களான தர்ஷிகா மற்றும் நிரஞ்சனாவை மீட்புக் குழுவினர் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.