ஆசை ஆசையாய் தோசை சாப்பிட்டு வாயில் நுரைதள்ளி லாரி ஓட்டுனர் மர்ம மரணம்... தாய், காதலி பரபரப்பு வாக்குமூலம்!
விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர், சீனிவாசபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வலிங்கம் . இவருக்கு வயது 29. இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஜனவரி 17ம் தேதி இவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறையினர், விஸ்வலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் உடலில் இரத்தக்காயம் இருந்ததால், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதனால் விஸ்வலிங்கத்தின் மரணத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விஸ்வலிங்கத்தின் தாய் முனியம்மாள், அவருடன் தற்போது குடித்தனம் நடத்தி வந்த காதலி செல்வி ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டதான திடுக்கிடும் வாக்குமூலம் வெளியானது. மதுபோதைக்கு அடிமையான விஸ்வலிங்கம், தனது காதலி மற்றும் தாயிடம் அவ்வப்போது தகராறு செய்து தாக்குதல் நடத்தி வந்தார். இதனை தாய் காதலி இருவராலும் பொறுக்க இயலவில்லை.
இதனையடுத்து இருவரும் சேர்ந்து விஸ்வலிங்கத்தை கொலை செய்திடலாம் என முடிவு செய்தனர். பூச்சிக்கொல்லி மருந்தை தோசை மாவில் கலந்து, தோசை சுட்டு கொடுத்தனர். இதுதெரியாமல் ஆசையாக தோசை சாப்பிட்டவர் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தார்.

கொலை சம்பவத்திற்கு முன்னதாக விஸ்வலிங்கம், உறவினர்கள் சிலருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் அவர்கள் கொலையாளிகள் என சித்தரிக்க உடலில் சில வெட்டுக்காயமும் ஏற்படுத்தினர். அதிகாரிகள் துருவித்துருவி நடத்திய விசாரணையில் தாய், காதலி இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். விசாரணைக்கு பிறகு காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
