ட்ர்க்கில் அறை அமைத்து 731 கிலோ கஞ்சா கடத்திய லாரி ஓட்டுநர்.. ஷாக்கான போலீசார்..!!

 
கஞ்சா கடத்தல்

புஷ்பா பட பாணியில் மலை பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டு, டிரக் டிரெய்லர் கீழ் ரகசிய அறை அமைத்து ₹2.19 கோடி மதிப்பில் 731 கிலோ கஞ்சா பண்டல்களை கடத்திய லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விஜயவாடாவின் புறநகர் பகுதியில் வாகனங்களை சோதனை செய்தனர். அதில் டிரெய்லருடன் கூடிய லாரி ஒன்று வந்தது. அதை வழி மடக்கி நிறுத்தி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ஒரு டிரக்கின் டிரெய்லரில் யாருக்கும் தெரியாத வகையில் அடிப்பகுதியில் ஒரு ரகசிய அறையை சுரங்கம் போல் அமைத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பிறகு இந்த ரகசிய அறையை திறந்து பார்த்ததில் கட்டு கட்டாக கஞ்சா பண்டல்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் ₹2.19 கோடி மதிப்புள்ள மொத்தம் 731 கிலோ கஞ்சா பண்டல்களை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து டிரக்கின் ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்ததில், ‘ஆந்திராவில் உள்ள மலைப் பகுதியில் இருந்து கஞ்சா சேகரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. கஞ்சா பண்டல்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். இதுகுறிக்கு வழக்குப்பதிவு செய்து டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில், என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தல் பின்னணியில் வேறு யார் உள்ளார்கள் என விசாரணை நடந்து வருகிறது. புஷ்பா பட பாணியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web