லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து.. ரூ.10 லட்சம் மதிப்புள்ள 75 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
கீழ்வலேளூர் விபத்து

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வலேளூர் பகுதியில் இன்று செம்மரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 75க்கும் மேற்பட்ட செம்மரங்கள் உயிரிழந்தன. சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேய்ச்சலுக்காக கீழ்வேளூர், மணலூர் கிராமத்திற்கு சரக்கு லாரியில் 200 செம்மறி ஆடுகளை ஏற்றி சென்றுள்ளார்.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் சிக்கிய  75க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின. இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த்னர்.

இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web