BMW கார் மீது கவிழ்ந்த லாரி.. நிமிஷத்துல பறிபோன உயில்: சுங்கச்சாவடியில் நிகழ்ந்த கோர விபத்து!

 
பிஎம் விபத்து பிஎம் விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடா - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில், நிலைதடுமாறிய சிமெண்ட் கலவை லாரி சொகுசு கார் மீது கவிழ்ந்ததில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளன.

உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சீனிவாசராவ், இன்று மதியம் தனது பிஎம்டபிள்யூ காரில் ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். விஜயவாடா அருகே உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காகக் காரை நிறுத்தி வரிசையில் காத்திருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த சிமெண்ட் கான்க்ரீட் கலவை ஏற்றிய லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

விபத்து

வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத லாரி, வரிசையில் நின்றுகொண்டிருந்த சீனிவாசராவின் கார் மீது பயங்கர சத்தத்துடன் அப்படியே கவிழ்ந்தது. டன்கணக்கிலான சிமெண்ட் சுமையுடன் லாரி கவிழ்ந்ததில், விலை உயர்ந்த அந்தச் சொகுசு கார் அப்பளம் போல உருக்குலைந்து நசுங்கியது.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய வழக்கறிஞர் சீனிவாசராவ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ஒரு நொடியில் லாரி சரிந்து காரை நசுக்குவது பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.