நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் மீது தாக்குதல்.. 5 பேர் பலி!

 
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ராம் மாவட்டம் ஜூலை மாதம் முதல் பழங்குடி மோதல்களால் சூழப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக ஷியா மற்றும் சன்னி பழங்குடியினருக்கு இடையே நடந்து வரும் மோதலில் 130க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ராம் மாவட்டத்திற்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் நேற்று வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அந்த நேரத்தில், வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் 2 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 3 லாரி ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் 5 ஓட்டுநர்களைக் கடத்திச் சென்றனர். நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web