உண்மையான காதலுக்கு கண்ணில்லை.. 62 வயது பாட்டியுடன் 25 வயது இளைஞன் காதல் திருமணம்

 
செரில்

ஐரோப்பா நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் செரில் (62) என்ற தனியாக வசித்து வந்தார். இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு குரான் மெக்கெய்ன் (25) என்பவரும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பழகிவந்த நிலையில், நெருக்கம் அதிகமானது. இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் காதலை வெளிப்படுத்தினர். 

37 வயது வித்தியாசமுள்ள இந்த ஜோடிக்குள் காதல் ஏற்பட்டதால், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தங்களது காதல் கதைகளை பற்றிய வீடியோக்களை டிக்டாக் மூலம் வெளியிட்டனர். 37 வயது வித்தியாசமுள்ள ஜோடியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இந்த ஜோடியை 41 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். 

செரில்

அதேநேரம் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய இந்த ஜோடிக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும் கூட, தங்களுக்குள் இடையிலான திருமண உறவை பேணி பாதுகாத்து வருகின்றனர். 

செரில்

இதுகுறித்து டிக்டாக்கில் செரில் வெளியிட்ட பதிவில், காதல் வயப்பட்டவர்களுக்குள் வெறுப்பு ஏற்படலாம். ஆனால் எங்களுக்குள் ஏற்பட்ட அன்பை மற்றவர்களுக்கு விற்க மாட்டோம். எனது மகிழ்ச்சிக்கு குரான் மெக்கெய்ன்தான் காரணம், என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது. 
 

From around the web