கிரீன் கார்டு பெறும் விதிமுறைகளில் டிரம்ப் திடீர் மாற்றம்!

 
கிரீன் கார்டு - டிரம்ப் கிரீன் கார்டு - டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதலே அந்நாட்டின் குடியேற்ற விதிகளில் பல்வேறு அதிரடி கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் விசா நீட்டிப்பு போன்ற நடைமுறைகளில் ஏற்கனவே பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அங்கு நிரந்தரமாகத் தங்கி வாழ்வதற்கு வழிவகை செய்யும் கிரீன் கார்டு வழங்கும் விதிகளில் டிரம்ப் நிர்வாகம் தற்போது புதிய கடுமையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

விசா சுற்றுலா விமானம்

புதிய விதிமுறைகளின்படி, இனிமேல் கிரீன் கார்டு பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் அதற்கான விண்ணப்ப செயல்முறைகள் நடைபெறும் காலத்தில் அமெரிக்காவிற்குள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தற்காலிக விசாக்களில் அங்கு தங்கியிருப்பவர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று, அங்கிருந்தே புதிய முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என அமெரிக்கக் குடியுரிமை வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இந்தத் திடீர் முடிவானது அங்கு தங்கியிருக்கும் சாமானியப் பணியாளர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துபாய்  விசா

அமெரிக்காவில் தங்கிப் படிக்கவும், பெரும்பாலான நிறுவனங்களில் சுதந்திரமாக வேலை செய்யவும் அங்கீகாரம் தரும் இந்த உயரிய அடையாள அட்டைக்காக லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர். தற்போதைய இந்த அதிரடி மாற்றத்தால் இந்தியர்கள் உட்பட கிரீன் கார்டுக்காகக் தவம் கிடக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. வல்லரசு நாட்டின் இந்தத் திடீர் விசா கெடுபிடி உலகளாவிய அளவில் தற்போதும் பெரும் பேசுபொருளாக மாறி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.