பிப்ரவரி 13ம் தேதி ட்ரம்ப் மோடி சந்திப்பு!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20ம் தேதி 2வது முறையாக ட்ரம்ப் பதவியேற்று கொண்டார். இதனையடுத்து அவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிப்ரவரி 13ம் தேதி இந்தியா பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ட்ரம்ப் நிருபர்களிடம் “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில் பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார்.பிப்ரவரி 13ம் தேதி ட்ரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசஉள்ளார். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றிரவு ட்ரம்ப் சார்பில் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். ஜனவரியில் நடைபெற்ற ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவில்ல எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!