ட்ரம்ப் அடுத்த அதிரடி... பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தம்!

 
அமெரிக்கா ட்ரம்ப்
 அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில்   பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக  அறிவித்துள்ளார்.  பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், இதனையடுத்து  பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவியை தற்காலிகமாக நிறுத்தி, அதனை மறுபரிசீலனை செய்யவும் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.  பாகிஸ்தானில் அமெரிக்க சர்வதேச உதவி முகமை மூலம் நடைபெறும் பல முக்கிய திட்டங்கள் நிறுத்த ஒரு காரணமாவும் அமைந்துள்ளது.

ட்ரம்ப்


பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வருடத்திற்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  நிதி உதவி வழங்கி வந்தது. இந்த உதவி, பாகிஸ்தானின் உருவாக்கம், வளர்ச்சி, மற்றும் பாதுகாப்பு துறைகளில் பங்களிப்பு அளிக்க முக்கிய காரணமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில்  இனிமேல்  நிதி உதவி வழங்கப்படாது என அமெரிக்காவின் முடிவெடுத்துள்ளது பாகிஸ்தானின் எரிசக்தி, ஆரோக்கியம், விவசாயம், கல்வி மற்றும் செருக்கு உதவி போன்ற துறைகளில் பல திட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம்.  
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தி, அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு மட்டும் உதவி வழங்கத் திட்டமிட்டு இருப்பதாக  செய்திகள் வெளிவருகின்றன.   USAID உலகளாவிய உதவிகளை வழங்கும் முக்கிய அமைப்பாக உள்ளதால், இந்த முடிவு பல உலகளாவிய திட்டங்களை பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப்
இது குறித்து வெள்ளை மாளிகையில் டிரம்ப்   ” பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் நிலத்திலுள்ள பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்க பாதுகாப்பிற்கு புறம்பான ஆபத்தாக உள்ளன.
நாம் பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாக உதவிகளை  வழங்கி வருகிறோம், ஆனால் அதே சமயம் அவர்கள் நம்முடைய முக்கிய உத்தரவுகளை பின்பற்றவில்லை. எனவே, இந்த உதவியை நிறுத்தி, அவர்களுடன் நமது உறவை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டது” எனவும் திட்டவட்டமாக டிரம்ப் தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web