ஈரான் துடைத்தெறியப்படும்... அதிரவைத்த டிரம்ப் எச்சரிக்கை!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் தொடர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள மிகக் கடுமையான எச்சரிக்கை சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு பூமியின் முகத்திலிருந்தே துடைத்தெறியப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் தென் கொரிய சரக்குக் கப்பல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் சுதந்திரத் திட்டத்தின் கீழ் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வரும் அமெரிக்கப் படைகளைத் தாக்க ஈரான் முயன்றால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கப் படைகள் ஈரானின் 7 சிறிய படகுகளைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தென் கொரியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவென டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேசக் கடல் வர்த்தகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு, மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு போர்ச் சூழல் உருவாகுமோ என்ற கவலையை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிகிறது.