சுக்குநூறாய் உடைந்தது ட்ரம்ப் கனவு... இந்த வருடமும் நோபல் பரிசு அறிவிப்பில் ஏமாற்றம்!
2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு தனக்குத் கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே தீவிர எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த முறையும் அந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

தான் பல்வேறு உலகளாவிய மோதல்களைத் தீர்த்து வைத்துள்ளதாகவும், அதனால் இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு தனக்குத் தகுதியானது என்றும் அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தீவிரமாக வாதிட்டிருந்தார். மேலும், நோபல் கமிட்டி தனக்குப் பரிசளிக்கவில்லை என்றால் அது அந்த அமைப்பின் மீதான மதிப்பிடத்த குறைப்பு என்ற ரீதியிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தது உலக அளவில் பேசப்பட்டது.
ஆனால், நார்வே நோபல் குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற நோபல் அமைதிப் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞரும் சர்வதேச நீதிபதியுமான நவனீதம் "நபி" பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்வதேச விவகாரங்களில் தான் சமாதானத் தூதுவராகச் செயல்பட்டுள்ளதாக ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறிவந்த போதிலும், இந்த ஆண்டும் நோபல் பரிசைக் வெல்லும் அவரது கனவு பலிக்காமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
