அயர்லாந்துக்கு ட்ரம்ப் திடீர் பயணம் - தலைவர்களுடன் சந்திப்பு!
அமெரிக்காவில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நெருங்கும் சூழலிலும், சர்வதேச அளவில் பல்வேறு பரபரப்புகள் நிலவிவரும் நிலையிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அயர்லாந்து நாட்டுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அயர்லாந்தின் டூன்பெக் நகரில் உள்ள டிரம்பிற்குச் சொந்தமான மைதானத்தில் நடைபெறும் 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் போட்டியை நேரில் ரசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இறுதிப்போட்டியில் அவரே நேரில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்குக் கோப்பையையும் வழங்குகிறார்.

இது முழுமையான அரசுமுறைப் பயணம் இல்லாவிட்டாலும், அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரைச் சந்தித்து அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டிரம்பின் இந்த திடீர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அயர்லாந்து மக்கள் வீதிகளில் இறங்கித் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
