சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ வலியுறுத்தல்!
Aug 27, 2026, 20:50 IST
சோழிங்கநல்லூர் பகுதியைத் தனி மாவட்டமாகவோ அல்லது தனி மாநகராட்சியாகவோ உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள 7 ஊராட்சிகள் செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழேயும், 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியின் கீழேயும் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் தங்களது தேவைகள் மற்றும் அலுவல் பணிகளுக்காக இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் மாறி மாறி அலைந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இந்த நீண்டகாலச் சிக்கலுக்கு அரசு நிர்வாக ரீதியான நிரந்தரத் தீர்வை உடனடியாகக் காண வேண்டும் என்று தவெக எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணன் சட்டமன்றத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
