திருவிழா துவங்கிடுச்சு டோய்... நவீன வசதிகளுடன் தலைவர்களுக்கு தயாரான பிரச்சார வாகனங்கள்!

 
பிரச்சார வாகனம்

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், இந்த தேர்தலில் போட்டியிடும், பிரச்சாரத்தில் களமிறங்கும் நடிகர்கள், நடிகைகள் தங்களது தேர்தல் சுற்றுப்பயணத்திற்கான வாகனங்களைத் தயார் செய்வதில் அதிக அக்கறைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சார வாகனத்தை தயாரிப்பதில் இப்போதும் கோவை தனித்து விளங்குகிறது. சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை கோவையில் சுறுசுறுப்பாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

பிரச்சாரம்

தமிழகத்தில் எதிரும் புதிருமாக வலம் வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு கோவையில் ஒரே இடத்தில் தான் பிரச்சார வாகனம் தயாரிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் களம் வேறு மாதிரி இருந்தாலும், இப்போதும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் கோவையில் தான் சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களைத் தயாரிக்க மாடல் செலக்ட் செய்து, தங்களுக்கு தேவையான வசதிகளைக் கூறி வாகனங்களைத் தயாரிக்க சொல்லி இருக்கிறார்கள். 

பிரச்சார வாகனம்

சுழலும் இருக்கைகள், மேற்கூரை வழியாக திடீரென உயர்ந்து வெளியே வரும் நாற்காலிகள், அமர்ந்தப்படியே கூட்டத்தினரைப் பார்த்து பேச வசதியாக ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்ட இருக்கைகள், ஒளிரும் எல்.இ.டி. விளக்குள், வேனில் இருந்தப்படியே பேசுவதை கூட்டத்தினர் துல்லியமாக கேட்கும் வகையில் சவுண்ட் சிஸ்டம் என மினி நகரும் பிரச்சார மேடையாகவே பல அரசியல் தலைவர்களின் வாகனங்கள் ரெடியாகி கொண்டிருக்கிறது.

இந்த வாகனங்களின் உள்ளே எலக்ட்ரிக் கழிப்பறைகள், லேப்-டாப், செல்போன்கள் சார்ஜ் போடும் வசதி, பிரிட்ஜ் என சகல வசதி, அமர்ந்து பேசுவதற்கு தனியே சோபா, நீண்ட தூர பயணத்தில் உறங்குவதற்கு தனி கட்டில் என சொகுசு வாகனங்கள் இந்தியா முழுவதும் வலம் வர தயாராகி வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web