சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன்.. அது போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்... நடிகர் சரத்குமார் !

 
சரத்குமார் ராதிகா

சூரிய வம்சம் படத்துல, மனைவியை கலெக்டர் ஆக்கியது போல, நிஜத்துல என் மனைவி ராதிகாவை எம்.பி., ஆக்குவேன் என்று நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

சூர்யவம்சம்

பாஜக சார்பில், விருதுநகர் தொகுதியின் வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிடுகிறார். இன்று காலை திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடத்தி விட்டு, தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் நடிகை ராதிகா. அவருடன் அவரது கணவரும் நடிகருமான சரத்குமாரும் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:

சரத்குமார் ராதிகா

 

என் மனைவி போட்டியிடுவது நான் போட்டியிடுவது போலத்தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அந்தப் பெண்ணையே வேட்பாளர் ஆக்கி இருக்கிறார். சூரியவம்சம் திரைப்படத்தில் படிக்காத நான் எப்படி ஒரு கலெக்டரை ஆக்கினேனோ அதேபோல் எனது மனைவியை நிச்சயம் எம்.பி. ஆக்குவேன் என்று கூறினார்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web