இளம் பருவத்தினருக்கான காசநோய் தடுப்பூசி... பாரத் பயோடெக் நிறுவனம் சாதனை!

 
காசநோய்

 இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசியை கண்டறிந்து சாதனை படைத்த நிறுவனம் பாரத் பயோடெக் . இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்நிறுவனம் வயது வந்தவர்களிடையே காசநோயை தடுக்கும் தடுப்பூசியின் பரிசோதனையை தொடங்கியுள்ளது. உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 % இந்தியாவில் இருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

காசநோய்

காசநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  ஸ்பெயினை சேர்ந்த பயோபேப்ரி என்ற மருந்து கம்பெனி காசநோயை தடுக்க எம்டிபிவேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் திறனை சோதிக்க தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், செனகல் நாடுகளில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு காச நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

தடுப்பூசி
இந்நிலையில், வயது வந்தவர்களிடையே தடுப்பூசியின் திறனை கண்டறிய இந்தியாவில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக  பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. குழந்தைகளை தாக்கும் காசநோய்களுக்கான  தடுப்பூசி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.  அதே நேரத்தில் இளம் பருவத்தினர், வயதானவர்களுக்கான  காசநோய் தடுப்பூசி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக  பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காசநோய் பாதிப்பு அடைந்தவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web