‘வனங்களின் தாய்’ - 1,00,000 மரக்கன்றுகளை நட்டு சாதித்த பழங்குடியினப் பெண்மணி துளசி கவுடா!

 
கர்நாடகா பழங்குடியினப் பெண் வனதேவதை மரக்கன்று துளசி கவுடா!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எளிய பழங்குடியினப் பெண்மணியான துளசி கவுடா, தனது வாழ்நாளில் சொந்தக் கைகளால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாத்து சுற்றுச்சூழல் சாதனை புரிந்துள்ளார். முறையான முறையான கல்வி அறிவு இல்லாவிட்டாலும், இயற்கையின் மீதும் மரங்களின் மீதும் அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பும் அர்ப்பணிப்பும் அவரை இன்று உலகறியப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் சாதனையாளராக உயர்த்தியுள்ளது.

கர்நாடகத்தின் அடர்ந்த வனப் பகுதிகளில் உள்ள ஹலகி பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த துளசி கவுடா, இளம் வயது முதலே காடுகளுடனும் மரங்களுடனும் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தார். வனத்துறையின் நாற்றுப் பண்ணையில் ஆரம்பத்தில் தினக்கூலித் தொழிலாளியாகத் தனது பணியைத் தொடங்கிய அவர், தனது அர்ப்பணிப்பான உழைப்பின் காரணமாகப் பின்னர் நிரந்தர ஊழியராக நியமிக்கப்பட்டார்.

மரம் காடு வனம் கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி தேனி

வனத்துறையில் சுமார் 35 ஆண்டுகள் தினக்கூலியாகவும், அதன் பிறகு நிரந்தர ஊழியராகவும் சேர்த்து மொத்தம் 60 ஆண்டுகள் அயராது பணிபுரிந்து தனது 70-வது வயதில் அவர் ஓய்வு பெற்றார். இந்த நீண்ட காலப் பணியின் போது, அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட பல காடு வளர்ப்புத் திட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றுப் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை முளைக்கச் செய்து வெற்றிகரமாக வளர்த்தெடுத்துள்ளார்.

துளசி கவுடாவிற்கு முறையான கல்வி இல்லை என்றாலும், காட்டில் உள்ள ஒவ்வொரு மரத்தின் வகைகளையும், மூலிகைத் தாவரங்களையும், அவற்றின் மருத்துவப் பயன்களையும், விதைகளின் தன்மைகளையும் கூர்ந்து கவனித்துத் துல்லியமாகக் கற்று வைத்துள்ளார். வனவியலாளர்களே வியக்கும் அளவிற்குத் தாவரங்கள் மற்றும் மரங்கள் குறித்த அபாரமான ஞானம் அவரிடம் இருந்ததால், அவரை வனத்துறை நிபுணர்கள் பலரும் அன்போடு "காடுகளின் கலைக்களஞ்சியம்" என்றே அழைத்தனர்.

இயற்கைப் பாதுகாப்பிற்காக அவர் ஆற்றிய மாபெரும் சேவையைப் போற்றும் வகையில், நாட்டின் உயரிய குடிமை விருதான 'பத்மஸ்ரீ' விருது வழங்கி இந்திய அரசு அவரை கெளரவித்தது. காலத்தால் அழியாத பசுமையை உலகிற்குப் பரிசளித்த துளசி கவுடா, இயற்கையைக் காக்க மனித மனங்களுக்குள் விழிப்புணர்வை ஊட்டிய ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் சக்தியாக இன்றும் என்றும் நினைவுகூரப்படுகிறார்.