வரலாறு காணாத உச்சத்தில் மஞ்சள் விலை! ஒரு குவிண்டால் ரூ.23,000-க்கு விற்பனை

 
மஞ்சள்

 

தமிழகத்தில் மஞ்சள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.20,000 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.23,000 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மஞ்சள்

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,000-க்கு விற்பனையானது. ஆனால், சில வாரங்களிலேயே விலை கணிசமாக அதிகரித்துள்ளது. மஞ்சள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, பருவமழை குறைவு ஆகியவை விலை உயர்வுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மஞ்சள் விலை மேலும் உயர வாய்ப்பு?

மஞ்சள்

போதிய மழை இல்லாததால் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாகவும், மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் மஞ்சளின் வரத்து குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக சந்தையில் மஞ்சளுக்கான போட்டி அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது.மேலும், உள்நாட்டில் அதிகரிக்கும் தேவை மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் காரணமாக வரும் நாட்களிலும் மஞ்சள் விலை உயர வாய்ப்புள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.