நீதிமன்றத்தில் பரபரப்பு.. போலீஸ் முன்பே கணவருக்காக இரண்டு மனைவிகள் குடுமிப்புடி சண்டை..!

 
இளம்பெண்கள் சண்டை
கோவையில் முன்னாள் மனைவி மற்றும் இன்னாள் மனைவி காவலர் முன் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரை சேர்ந்தவர் சிந்து, 26. இவர் தனது கணவர், திரைப்பட தயாரிப்பாளர் பார்த்திபனுடன், கோவை நீதிமன்ற்த்தின் பின்பக்க வாசல் அருகே உள்ள வழக்கறிஞர் ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். பின் வீட்டிற்கு புறப்படுவதற்காக, பார்த்திபன் பைக்கை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த வேடப்பட்டியை சேர்ந்த பார்த்திபனின் முன்னாள் மனைவி உமா, 33, திடீரென பார்த்திபனின் பைக் சாவியை பறித்தார்.

இதனை பார்த்த சிந்து, உமாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதைக்கண்டு ஏராளமானோர் திரண்டனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், இருவரையும் சமரசம் செய்தனர். காயமடைந்த சிந்துவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

a video of 2 women fighting in front of the police near coimbatore court  has gone viral: கோவை கோர்ட் வாசலில் பயங்கரம்! கொடூரமாக தாக்கிக் கொண்ட 2  பெண்கள்! வைரலாகும் வீடியோ!

சிந்து புகாரின் படி, ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் உமா மீது வழக்கு பதிந்தனர். இதேபோல, உமா புகாரின் படி, சிந்து மற்றும் பார்த்திபன் மீது, காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இரு வழக்குகள் குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web