கட்சிக்குள் சலசலப்பு... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. சையத் பாரூக் பாஷா அதிருப்தி!

 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சையத் பரூக் பாஷா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சையத் பரூக் பாஷா

தமிழக அரசியல் வட்டாரத்தில், தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்குள் நிலவும் சலசலப்புகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி போட்டியிட்டது. இதில் பாபநாசம் தொகுதியில் வென்ற ஷாஜஹான் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், கட்சியின் மற்றொரு முக்கிய முகமான வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

சையத் பாரூக் பாஷா தமக்கும் அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஐயூஎம்எல் தரப்பில் பாபநாசம் எம்.எல்.ஏ-வுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் வெளிப்பாடாகவே, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவை அவர் புறக்கணித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் பலமாக எழுந்துள்ளன.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சையத் பாரூக் பாஷா தரப்பிலோ அல்லது ஐயூஎம்எல் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியாகவில்லை.