கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் ... பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படும் நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக இறங்கினர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் இறங்கி அந்தப் பெண்ணை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்ணிற்குத் தேவையான முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தீயணைப்புத் துறையினரின் இந்தத் துரிதமான நடவடிக்கைக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
