ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மிகவும் கோலாகலமாக நடைபெறும் இந்த பெருவிழாவில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் பின்னர் வேறு ஒரு வேலைநாள் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெருவிழா நாள்களில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
